Lausanne ரயில் நிலைய மாவட்டத்தில் இன்று அதிகாலையில் பாரிய பொலிஸ் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
Vaud புகலிட வரவேற்பு மையத்திற்குள் ஒரு பெண்ணும் ஆணும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், இருவரும் பொலிசாரினால் காவலில் வைக்கப்பட்டனர்.
பொலிஸ் நடவடிக்கை முடிந்துவிட்டது. இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் எவரும் காயமடையவில்லை” என்று Lausanne நகர பொலிஸ் பேச்சாளர் அலெக்ஸியா ஹேகன்லோச்சர் தெரிவித்தார்.
அவர்களின் நோக்கங்கள் மற்றும் கோரிக்கைகள் ஆரம்பத்தில் அறியப்படவில்லை.
இந்த நடவடிக்கை காலை 11 மணிக்கு முன்னதாக முடிவுக்கு வந்தது.
பொலிஸ் சிறப்புக்குழு ஒன்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த நடவடிக்கையில் 30 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
முன்னெச்சரிக்கையாக அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக நிலையம் அருகே உள்ள பல வீதிகளை பொலிசார் மூடினர்.
மூலம் -watson.ch