சிகை அலங்காரப் பொருட்களில் ஆபத்தான பொருட்கள் இருப்பதாக எச்சரித்துள்ள, Basel-Stadt கன்டோனல் ஆய்வகம் பதினொரு தயாரிப்புகளுக்கு தடை விதித்துள்ளதுடன், எட்டு பொருட்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாகவும் வகையிட்டுள்ளது.
Basel-Stadt கன்டோனல் ஆய்வகம், சிகையலங்கார தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்துள்ளது.
29 மாதிரிகளில் 21 நிராகரிக்கப்பட்டுள்ளது.
மற்றும் பதினொரு தயாரிப்புகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிக formaldehyde உள்ளடக்கம் கொண்ட எட்டு தயாரிப்புகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் வகையிடப்பட்டுள்ளது.
“Honma Tokyo”, “Cocochoco Professional Gold”, “Bien Cacau Professional” மற்றும் “Native Base Keratin” ஆகியவற்றின் தயாரிப்புகள் பற்றிய பொது எச்சரிக்கைகள்விடுக்கப்பட்டுள்ளன.
formaldehyde மென் சவ்வுகளை எரிச்சலூட்டுவதுடன், தீவிர நிகழ்வுகளில், அது உள்ளிழுக்கப்பட்டால் புற்றுநோயை கூட ஏற்படுத்தும்.
பரிசோதிக்கப்பட்ட 29 தயாரிப்புகளில் 20 பொருட்கள், முடி நேராக்கிகள்.
ஏனைய தயாரிப்புகள், முடி பெர்மிங் பொருட்கள், முடி பராமரிப்பு பொருட்கள், முடி ஷாம்புகள் மற்றும் ஒரு கூந்தல் ஸ்டைலிங் தயாரிப்பு ஆகும்.
Argau மற்றும் Basel-Stadt கன்டோன்களில் சேகரிக்கப்பட்ட தயாரிப்புகளில் ஏறக்குறைய பாதி, சிகையலங்கார நிலையங்களில் சேகரிக்கப்பட்டன.
ஐந்து பொருட்கள் மொத்த விற்பனையாளர்களிடமிருந்தும், மூன்று ஆபிரிக்கா/ஆசியா கடைகளிலிருந்தும், இரண்டு பல்பொருள் அங்காடியிலிருந்தும் பெறப்பட்டன.
மூன்றில் இரண்டு பங்கு மாதிரிகள் ஐரோப்பா அல்லாத நாடுகளிலிருந்து வந்தவையாகும்.
மூலம்- 20min