St. Gallen நகரில் பஸ் ஒன்று சடுதியாக பிரேக் போடப்பட்டு நிறுத்தப்பட்டதால், இரண்டு பயணிகள் காயம் அடைந்தனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்த போது பாதசாரி ஒருவர், வீதியைக் கடக்க முயன்றதால், பஸ் சாரதி சடுதியாக பிரேக் போட்டு நிறுத்தினார்.
இதனால், இரண்டு பெண் பயணிகள், நிலை தடுமாறி விழுந்து காயம் அடைந்தனர்.
அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.ch