-5.7 C
New York
Sunday, December 28, 2025

உலகின் மிகசெங்குத்தான கேபிள் கார் சுவிட்சர்லாந்தில் இயங்கத் தொடங்கியது.

உலகின் மிகவும் செங்குத்தான கேபிள் கார், சுவிட்சர்லாந்தில் நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.

இது Bernese Oberland,  இல் உள்ள Stechelberg மற்றும்  Mürren கிராமங்களை இணைக்கிறது.

159.4% சாய்வு கொண்ட, Mürrenfluh இன் செங்குத்தான பாறைகளில், இது பயணம் செய்ய நான்கு நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

இந்த கேபிள் கார் கிட்டத்தட்ட 1,194 மீட்டர் நீளமுள்ள பாதையில் 775 மீட்டர் உயரத்திற்கு ஏறுகிறது.

இரண்டு கேபிள் கார் கேபின்கள் ஒவ்வொன்றிலும் 85 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

கேபிள் கார் முழு திறனில் இயங்கும் போது ஒரு மணி நேரத்திற்கு 800 பேரை நகர்த்த முடியும்.

செங்குத்தான சாய்வின் காரணமாக, செக்கனுக்கு ஏழு மீட்டர் வேகத்தில் பயணிக்கும் கேபிள் கார், ஊழியர்கள் இல்லாமல் தானாகவே இயங்குகிறது.

கமராக்கள் மற்றும் சென்சார்கள் நிலையான கண்காணிப்பை உறுதி செய்கின்றன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles