Münchenstein இல் உள்ள Bruderholzstrasse இல் ஒரு விநியோக வான் தீப்பிடித்து எரிந்து நாசமாகியது.
சனிக்கிழமைமதியம் 12.30 மணிக்கு சற்று முன்னதாக இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
- Advertisement -

ஓடிக் கொண்டிருந்த வான் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதும், அதன் சாரதியான 56 வயதுடைய நபர் உடனடியாக வெளியேறினார்.
தீயணைப்பு பிரிவினர் வந்து சேர்வதற்கிடையில் வாகனம் முழுமையாக எரிய தொடங்கியிருந்தது.
15 நிமிடங்களில் அவர்கள் தீயை முற்றாக அணைத்தனர்.
இதனால் 2 மணிநேரம், அந்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.
மூலம்- 20min


