-9.5 C
New York
Monday, December 23, 2024

விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய சுவிஸ்.

இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது.

இதனால் சுவிசில்  வணிகம் மேற்கொண்டிருக்கும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.ஷ

சுவிட்சர்லாந்து சட்டப்படி மற்ற நாட்டு நிறுவனங்கள் 10 சதவீதம் வரியை செலுத்த வேண்டும்.

ஆனால் இந்தியா போன்று விருப்ப பட்டியலில் இருக்கும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 5சதவீதம் வரியை செலுத்தினால் போதுமானது.

இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்ததின் கீழ், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருப்ப பட்டியலிலிருந்து தற்போது இந்தியாவை சுவிஸ் நீக்கியிருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வணிக நிறுவனமான நெஸ்லே பொருட்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகிறது.

குறிப்பாக மகி நூடில்ஸ் அதிக விற்பனை ஆகும் பண்டமாக இருந்தது.

ஆனால் மகி நூடில்ஸ் இல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ரசாயனம் கலந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்ட்டு,  கடந்த 2015 ஆம் ஆண்டு  இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

அதிக ரசாயனம் கலக்கவில்லை என கூறி நெஸ்லே நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசின் முடிவு சரிதான் என்ற தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், சுவிட்சர்லாந்து இந்தியாவை விருப்ப பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அமுலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles