சுவிஸ் இராஜதந்திரியும், இடம்பெயர்வுக்கான அரச செயலருமான, Christine Schraner Burgener அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார்.
61 வயதான அவரை அந்தப் பதவிக்கு சுவிட்சர்லாந்து முன்னிறுத்தப் போவதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பதவி உலகளாவிய அகதிகள் கொள்கையை வடிவமைப்பதில் முக்கியமானது.
இது ஜெனீவாவில் உள்ள மிகப்பெரிய ஐ.நா. அமைப்பாகும்.
தற்போதைய ஆணையராக உள்ள இத்தாலியின் பிலிப்போ கிராண்டி தனது பதவிக் காலத்தை முடிப்பதால், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உயர் ஆணையர் பதவி வெற்றிடமாக உள்ளது.
புதிய உயர் ஆணையருக்கான தேர்தல் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இடம்பெறும்.
ஜெர்மன் எம்.பி நீல்ஸ் ஆனென் இந்தப் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மூலம்- swissinfo