18.1 C
New York
Thursday, October 8, 2026

ட்ராம் மோதி படுகாயமடைந்தவர் மரணம்.

சூரிச்சில்  ஒன்பது நாட்களுக்கு முன்னர் Quellenstrasse நிறுத்தத்தில், பாதசாரி கடவையில்,  ட்ராம் மோதியதில் காயமடைந்த 81 வயது முதியவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மாவட்டம் 5 இல்  டிசம்பர் 4,ஆம் திகதி மாலை இந்த விபத்து இடம்பெற்றது.

- Advertisement -

அந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த  ஓய்வூதியம் பெறுபவரான பாதசாரி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் வெள்ளிக்கிழமை மாலை மருத்துவமனையில் இறந்தார் என்று சூரிச் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles