9 C
New York
Monday, March 30, 2026

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்.

Aargau கன்டோனில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

சனிக்கிழமை மாலை சுமார் 7:45 மணியளவில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த ஒருவர் Wildegg இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தஞ்சம் புகுந்துள்ளார் என தகவல் கிடைத்து, Lenzburg  பிராந்திய பொலிசார் மற்றும் Aargau கன்டோனல் பொலிசார் உடனடியாகச் சென்று காயமடைந்த ஒரு நபரைக் கண்டுபிடித்தனர்.

34 வயதான மசிடோனியனியரான அவர், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பெரிய அளவில் தேடுதல் நடத்தப்பட்ட போதும்,  அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles