Aargau கன்டோனில் Gebenstorf, என்ற இடத்தில் நேற்றுமாலை நடந்த விபத்து ஒன்றில் 14 வயது சிறுமி படுகாயமடைந்தார்.
விபத்தை ஏற்படுத்திய 93 வயது முதியவர் காயமின்றி தப்பியுள்ளார்.
இ- ஸ்கூட்டரில் பயணம் செய்த சிறுமி, பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முயன்ற போது, முதியவர் ஓட்டிச் சென்ற கார், அவர் மீது மோதியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுமி ஹெலிகொப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மூலம் – 20min.