23.9 C
New York
Thursday, June 26, 2025

பாடசாலைகளில் மொபைல் போன்களை தடை செய்ய 82 வீதமானோர் ஆதரவு.

பெரும்பாலான சுவிஸ் குடியிருப்பாளர்கள் (82%) பாடசாலைகளில் மொபைல் போன்களை தடை செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

Sotomo ஆராய்ச்சி நிறுவனம்  நடத்திய ஆய்வின் படி,,  இளைஞர்கள் கூட இந்த நடவடிக்கையை ஆதரிக்கின்றனர்.

18-25 வயதுடையவர்களில் 64% பேர்  இந்த தடைக்கு “ஆம்” என்று பதிலளித்துள்ளனர்.

ஆண்களை விட (78%) அதிகமான பெண்கள் (87%) தடைக்கு ஆதரவாக உள்ளனர்.

பல்கலைக்கழகக் கல்வி (76%) பெற்றவர்களை விட,  பயிற்சி முடித்தவர்கள் அல்லது கட்டாயக் கல்விக்குப் பிறகு (86%) பாடசாலையை விட்டு வெளியேறியவர்களிடையே இதற்கு ஆதரவு அதிகமாக உள்ளது.

 மூலம் – swissinfo

Related Articles

Latest Articles