25 C
New York
Thursday, June 26, 2025

2023இல் பாதிக்கும் அதிகமானோர் புற்றுநோய், இதய நோய்களால் மரணம்.

2023 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் மரணமானவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், புற்றுநோய் மற்றும் இருதய நோய்களால் இறப்புக்களைச் சந்தித்துள்ளனர்.

மத்திய புள்ளியியல் அலுவலகம் சுவிட்சர்லாந்தில் 2023 ஆம் ஆண்டில், மரணமான 71,822  பேரின் இறப்புக்கான காரணங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறந்தவர்களில் அதில் 35,109 ஆண்கள்  என்றும், 36,713 பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் இறப்புக்கான பொதுவான காரணங்களில், இருதய நோய்கள் (28 சதவீதம்), புற்றுநோய் (24 சதவீதம்), மனச்சோர்வு (9 சதவீதம்), சுவாச நோய்கள் (7 சதவீதம்) மற்றும் விபத்துகள் மற்றும் வன்முறை போன்ற வெளிப்புற காரணங்கள் (6 சதவீதம்) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று 2 சதவீத இறப்புகளை மட்டுமே ஏற்படுத்தியது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles