21.6 C
New York
Friday, September 12, 2025

பின்தொடர்வது தனியான தண்டனைக் குற்றமாகிறது.

பின்தொடர்வது அல்லது துன்புறுத்துவது சுவிஸ் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில், ஒரு குறிப்பிட்ட  தனிக் குற்றமாக கருதப்படவுள்ளது.

நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பின்னர் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பின்தொடர்வது உளவியல், உடல் மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், சமூக வலைப்பின்னலின் விளைவாக, இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் பரவலாகிவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செலின் வரா  குறிப்பிட்டார்.

குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்கள், பின்தொடர்தலினால், தங்கள் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்கிறார்கள் என்று தெரிவித்த அவர் இதுகுறித்த நாடாளுமன்ற விவாதம் நடத்த கோரினார்.

பெடரல் கவுன்சில் இதற்கு ஆதரவாக இருந்தாலும்  நீதி அமைச்சர் பீட் ஜோன்ஸ் எதிர்பார்ப்புகளை மிக அதிகமாக உயர்த்துவதற்கு எதிராக எச்சரித்தார்.

புதிய தரநிலையை அமுல்படுத்துவதில் உள்ள சவால்களையும் அவர் முன்வைத்தார்.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர்.

பிரதிநிதிகள் சபையின் குழுவின் வரைவின்படி, பின்தொடர்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles