2 C
New York
Friday, February 20, 2026

பாதசாரிக் கடவையில் கோர விபத்து.

சூரிச்சில் உள்ள, Turbenthal   இல் நேற்றுக்காலை, பாதசாரி கடவையில் சென்ற கொண்டிருந்த 15 வயதினர் ஒருவர், கார் மோதி பலத்த காயமடைந்தார்.

Tösstalstrasse இல் காலை 9:30 மணியளவில்  இந்த விபத்து இடம்பெற்றது.

இரண்டு பதின்மவயதினர், வீதியைக் கடக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டது.

Winterthur இல் இருந்து வந்த கார் பாதசாரி கடவையில் சென்ற கொண்டிருந்த  15 வயதுடையவர் மீது மோதி,  பல மீட்டர் தூரத்திற்கு, தூக்கி வீசியது.

பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருடன் சென்ற 17 வயதுடைய மற்றையவர்  சிறிய காயங்களுக்கு உள்ளானார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles