அடுத்த ஆண்டு சூரிச் விமான நிலையத்தில் தன்னியக்க ஷட்டில் பஸ் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படவுள்ளது.
ரோபோ பஸ் என்று அழைக்கப்படும், இந்த வாகனத்தில் ஒன்பது பேர் வரை பயணிக்க முடியும்.
அடுத்த சில மாதங்களில் இது செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலைய வளாகத்திற்குள் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது வசதியாக அமையும்.