சுவிசில் கடுமையான பனிப்பொழிவினால் அதிகளவில் விபத்துகள் இடம்பெறுகின்றன.
நேற்றும் இன்றும், Schwyz கன்டோனில், வீதிகளில், சுமார் ஒரு டசினுக்கும் அதிகமான போக்குவரத்து விபத்துகள் நிகழ்ந்தன.
“இவற்றில் பெரும்பாலானவை ஓட்டுநர்கள் வீதியில் இருந்து விலகியதால், ஏற்பட்ட விபத்துகள்.
இதனால் வாகனங்கள் புல்வெளியில் சிக்கிக்கொண்டன அல்லது சுவர், பாதுகாப்பு தண்டவாளங்கள், கற்கள் அல்லது மின் கம்பத்தில் மோதியிருக்கின்றன என்று பொலிஸ் அறிக்கை கூறுகிறது.
பெர்னில் கடும் பனியினால் இன்று காலை பல பாதைகளில் பேருந்துகள் இடைநிறுத்தப்பட்டன.
கடும் பனியுடனான இந்தக் காலநிலை கிறிஸ்மஸ் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.