வடக்கு சுவிட்சர்லாந்தின் Rorschach நகரத்தில், Constance ஏரிக் கரையில் உள்ள, 100 ஆண்டுகள் பழமையான குளியல் குடில் (Badhütte) இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் முற்றாக எரிந்து நாசமாகியது.
கட்டிடம் தண்ணீரில் இருப்பதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டதாக St. Gallen கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
அதிக எண்ணிக்கையான அவசர சேவைகள் பிரிவினர் அனுப்பப்பட்டனர்.
தீயணைப்பு துறை மற்றும் ஏரி மீட்பு சேவையினர் இணைந்து, வரலாற்று புகழ் பெற்ற மரத்தினால் ஆன Badhütte இல் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர்.
எனினும், குளிக்கும் குடிசை முற்றிலும் எரிந்து போனது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
தீவிபத்தினால் கட்டடம் பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் அது இடிந்து விடும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடில் 1924ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.
மூலம்- Swissinfo