சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் நேற்றுக்காலை கடுமையான பனிப்பொழிவு காரணமாக வீதி மற்றும் ரயில் போக்குவரத்து தடைபட்டது.
காலையில் நெரிசல் நேரத்தில் ஏராளமான வாகன விபத்துகள் நடந்தன.
லொறிகள் பனியில் சிக்கியதால், பெர்ன் மற்றும் முஹ்லிபெர்க் இடையே A1 நெடுஞ்சாலை உட்பட பல பகுதிகளில் வீதிகள் மூடப்பட்டன.
நண்பகலில் இயல்பு நிலை திரும்பியது.
பேர்ன் கன்டோனில் சுமார் 70 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சுயமாக ஏற்படுத்திய விபத்துகள் என்று கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்ட போதும், யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.
பேர்னில் ட்ராம் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றாலும், பல்வேறு பேருந்து வழித்தடங்களை ரத்து செய்ய வேண்டியிருந்தது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக சுவிஸ் பெடரல் ரயில்வேயும் தாமதம் மற்றும் ரத்துகளை சந்தித்தது.
மூலம்- swissinfo