சூரிச் விமான நிலையம் நேற்று பயணிகள் கூட்ட நெரிசலினால் திணறியது.
நேற்று சூரிச் விமான நிலையத்தில் பயணிகள் நிரம்பியிருந்ததால், அவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்த்து.
செக்-இன் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடிக்கு முன்னால் மக்கள் கூட்டத்தைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இது கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது வழக்கமான நிகழ்வு தான் என்றும், அதிகளவானோர் பயணத்தில் ஈடுபடுவதால், காத்திருப்பு நேரம் சில நேரங்களில் நீண்டதாக இருக்கும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்டிகை காலத்தில் பயணிகள், பொதுவாக முன்கூட்டியே வருவதை விமான நிலையம் பரிந்துரைக்கிறது.
பயணிகள் குறுகிய தூர விமானங்களில் புறப்படுவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவும், நீண்ட தூர விமானங்களில் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது.
மூலம்- bluewin