Spiez BE இல் வீதியில் சென்று கொண்டிருந்த தபால் பேருந்து ஒன்று, பனியில் வழுக்கி, பள்ளத்திற்குள் விழுந்தது.
நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
Krattigen இல் இருந்து Spiez நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தே, Krattigstrasse இல் ஒரு பள்ளத்தினுள் கவிழ்ந்தது.
இந்தச் சம்பவத்தில் பலர் சிறியளவில் காயமடைந்தனர். ஒருவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மூலம்- 20min