Zofingen இல் 67 வயதான Bernadette Wüest என்ற பெண்ணை, டிசம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை முதல் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது,
சனிக்கிழமை காலை அவர் Zofingen இல் உள்ள வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவரது கார் (Toyota Yaris, கருப்பு, AG 474279) அதன் பின்னர் அங்கு இல்லை என்பதையும் அவரது வீட்டில் தங்கியிருப்பவர் கவனித்தார்.
அன்று காலை அவரைக் காணவில்லை என்று Aargau கன்டோனல் பொலிசாரிடம் புகார் செய்தார்.
பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், காணாமற்போன பெண்ணின் இருப்பிடம் பற்றிய எந்த தகவலும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min