Kreuzlingen Bernrain TG ரயில் நிலையத்திற்கு அருகில் டிக்கெட் இயந்திரம் வெடித்துச் சிதறியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இரண்டு பலத்த சத்தங்களை கேட்டு எழுந்து, பார்த்த போது, இரண்டு அகதிகள் ஓடுவதைக் கண்டதாக, அருகிலுள்ள குடியிருப்பாளர் கூறினார்.
பின்னர் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, அவர்கள் டிக்கெட் இயந்திரத்தை வெடிக்கச் செய்ததைக் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை கிடைத்த தகவலின்படி, அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவர், பைரோடெக்னிக் பொருட்களால் டிக்கெட் இயந்திரத்தை சேதப்படுத்தியுள்ளார்.
இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணச்சீட்டு இயந்திரம் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது.
பொருள் சேதம் பல பல்லாயிரக்கணக்கான சுவிஸ் பிராங்குகளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thurgau பொலிசார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்- 20min