ஒஸ்ரியாவின் கிராஸ் விமான நிலையத்தில் சுவிஸ் ஏர்பஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பணியாளர் ஒருவர் ஒரு வாரத்திற்குப் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்று இறந்ததாக சுவிஸ் விமான நிறுவனம் அறிவித்தது.
74 பயணிகளுடன் புக்கரெஸ்டில் இருந்து சூரிச் சென்ற விமானத்தின் கொக்பிட் மற்றும் கபினில் புகை ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவரின் நிலை மோசமான நிலையில் இருந்து வந்தார்.
விமானப் பணியாளரான அந்த இளைஞனின் மரணத்திற்கான காரணம் குறித்து எந்த விவரங்களையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று சுவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவரது மரணத்திற்கு சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- bluewin