4.1 C
New York
Monday, December 29, 2025

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தயாராக உள்ள சூரிச்.

புத்தாண்டை கொண்டாடுவதற்கு இன்று இரவு பல்லாயிரக்கணக்கான மக்கள்,  சூரிச் ஏரிப் படுகையில் குவிவார்கள்.

 Silvesterzauber சங்கம் மீண்டும் ஒரு பெரிய வானவேடிக்கையை ஏற்பாடு செய்துள்ளது.

இது நள்ளிரவுக்குப் பின்னர் 20 நிமிடங்கள் கழித்து, தொடங்கும்.

சூரிச்சின் நகர மையத்தில் உள்ள தாழ்வான ஏரிப் படுகையைச் சுற்றிலும், நகரப் பகுதியில் உள்ள சூரிச் ஏரியிலும் தற்காலிக போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் இருக்கும் என்று சூரிச் நகர பொலிஸ் எச்சரித்துள்ளது.

இவை இன்று அதிகாலை 3 மணி முதல்  நாளை ஜனவரி 1, 2025 புதன்கிழமை  பிற்பகல் சுமார் 12 மணி வரை நீடிக்கும்.

கூடுதலாக, ஏரியிலிருந்து நகர மண்டப பாலம் மற்றும் செக்செலுடென்பிளாட்ஸ் பகுதியில் லிம்மாட் பகுதிகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக, இன்று இரவு 6 மணி முதல்  ஜனவரி 1 காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பகுதியில் பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles