-4.6 C
New York
Sunday, December 28, 2025

பள்ளத்தில் பாய்ந்த கார்- கிரேன் மூலம் மீட்கப்பட்ட பெண்.

பெர்னில், Kiesen க்கு அருகில் A6 நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

நேற்றுக் காலை 9.30 மணிக்குப் பின்னர் இந்த விபத்து இடம்பெற்றதாக பெர்ன் கன்டோனல்  பொலிசார் அறிவித்துள்ளனர்.

Rubigen இல் இருந்து Thun நோக்கி சென்ற கொண்டிருந்த கார் உயரத்தில், சாலையின் வலது பக்கத்தை விட்டு விலகி, வனவிலங்கு வேலியை உடைத்துக் கொண்டு பாய்ந்து ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சாரதியான பெண் பலத்த காயம் அடைந்தார்.

தீயணைப்புப் பிரிவினர், அவசர சேவைகள் கடினமாகப் போராடி  கிரேன் உதவியுடன் அவரை, விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து மீட்டனர்.

ஆபத்தான நிலையில் அந்தப் பெண் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles