பாஸல் பகுதியில் உள்ள மிகப்பெரிய பெயின்ட் நிறுவனங்களில் ஒன்றில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
ஃபிஷர் ஏஜி பெயின்ட் நிறுவனத்தின் களஞ்சியத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்க தீயணைப்பு படையினருக்கு சுமார் 25 நிமிடங்கள் தேவைப்பட்டன.
தீ விபத்து ஏற்பட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
எனினும் இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க பொருள் சேதம் ஏற்பட்டதாக, பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்- 20min.