சூரிச் கன்டோனில், புலாச்சில், ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் தீ விபத்து குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
வெறுமையாக இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பொருள் சேதத்தை துல்லியமாகக் கணக்கிட முடியாத போதும், 100,000 பிராங்குகளைத் தாண்டும் என பொலிஸ் தெரிவித்துள்ளது.
புகை அபாயம் குறித்து அலர்ட்ஸ்விஸ் எச்சரித்தது.
அருகிலுள்ள மக்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடிவிட்டு, குளிரூட்டி மற்றும் காற்றோட்ட அமைப்புகளை அணைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது.
மூலம்- 20min.