16.6 C
New York
Thursday, September 11, 2025

சுவிஸ் ட்ரோன்களின் பறப்பு இடைநிறுத்தம்.

இந்தியாவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவங்களை அடுத்து, சுவிஸ் ஆயுதப் படைகளின் “ADS 15” உளவு ட்ரோன் பறப்பது  உலகளவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆயுதப் படைகளின் “Hermes 900 HFE”, ட்ரோன்,  சோதனைகளின் போது கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அவசரமாகத் தரையிறங்கப்பட்டது.

இதன் போது,ட்ரோன் சேதமடைந்ததாக, பெடரல் ஆளில்லா விமானப் போக்குவரத்து அலுவலகம் Armasuisse தெரிவித்துள்ளது.

இதையடுத்து அனைத்து சுவிஸ் ட்ரோன்களும் பறக்கும் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.

விபத்துக்கான காரணம் தெளிவுபடுத்தப்படும் வரை “ADS 15” விமான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தில் ட்ரோனுடன் பயிற்சி மற்றும் சோதனை மூன்று வாரங்களுக்கு தடைபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles