வாலாய்ஸில் தலையின் பின்புறத்தில் காயங்களுடன் காணப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை, மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
30 வயது சுவிஸ் பெண், தலையின் பின்புறத்தில் காயத்துடன் மயக்கமடைந்திருப்பதைக் கண்டவர்கள், அவசர சேவைகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இளம் பெண் சியோன் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு காயங்களால் அவர் அன்றிரவு உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் சூழ்நிலைகளை கன்டோனல் காவல்துறை விசாரித்து வருகிறது.
மூலம்- bluewin

