அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார்.
இன்று மாலை 3 மணிக்கு வொசிங்டனில் நடக்கும் நிகழ்வில் அவர் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்ளுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு பல்வேறு பேரணிகள் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை சீனாவின் டிக் டொக் செயலிக்கு இன்று முதல் தடைவிதிக்கப்படவிருந்த நிலையில் நேற்று அந்தச் செயலியின் இயக்கம் அமெரிக்காவில்நிறுத்தப்பட்டது.
எனினும், டொனால்ட் ட்ரம்ப் அளித்த வாக்குறுதியை அடுத்து, மீண்டும் அங்கு டிக் டொக் செயற்படத் தொடங்கியுள்ளது.