17.2 C
New York
Wednesday, September 10, 2025

டாவோசில் இன்று தொடங்கும் மாநாடு- சுவிசில் எதிர்ப்பு பேரணிகள்.

டாவோசில் இன்று ஆரம்பமாகும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுவிட்சர்லாந்தில் பேரணிகள் இடம்பெற்றுள்ளன.

பெர்ன் மற்றும் Graubünden கன்டோன்களில் இந்த எதிர்ப்பு பேரணிகள் நேற்று நடத்தப்பட்டன.

அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்தப் பேரணிகளில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.

பல நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நேற்று பிற்பகல் பெர்ன் நகர மையத்தில் அணிவகுத்துச் சென்றனர்.

சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் பொலிசார் அவர்களைக் கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அதேவேளை, Graubünden கன்டோனில் Küblis, நகரில் 350 இற்கும் அதிகமான முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் இரண்டு நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச தலைவர்கள், அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுநர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்கும் நிலையில் டாவோஸ் நகரில் இருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை டாவோஸ் நகரிலும் நேற்று மாலை இடதுசாரிகள் இந்த மாநாட்டிற்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருந்தது.

இந்த போராட்டத்திற்காக 350 எதிர்ப்பாளர்கள் ரயில் மூலம் நேற்றுமாலை டாவோஸ் வந்தடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles