டாவோசில் உலக பொருளாதார மன்ற மாநாடு இன்று ஆரம்பமாகின்ற நிலையில் அங்குள்ள லாகோ ஹெலிகொப்டர் தளத்தை கிரீன்பீஸ் ஆர்வலர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
“அதிக பணக்காரர்களுக்கு வரி விதிக்கவும்” என்பது போன்ற பதாதைகளுடன், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பருவநிலை பாதுகாப்பு மற்றும் சமூக நீதிக்கு நிதியளிக்க பணக்காரர்களுக்கு நியாயமான வரி விதிக்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
“உலகம் எரிந்து கொண்டிருக்கும் போது டாவோஸில் முடிவில்லா விவாதம் நடந்து வருவது ஒரு அவதூறு” என்று கிரீன்பீஸ் பிரதிநிதி ஆக்னஸ் ஜெஸ்லர் தெரிவித்துள்ளார்.
முற்றுகை அமைதியான முறையில் இடம்பெறுகிறது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் பொலிசாருக்கு முன்கூட்டியே இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
மூலம்-20min