சூரிச் விமான நிலையத்தில் 38 கிலோ கிராம் கஞ்சாவுடன் 84 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பாங்கொக்கில் இருந்து சூரிச்சிற்கு பயணம் செய்த அவர், சுங்கத்துறையினரால் சோதனை செய்யப்பட்ட போதே அவரது பயணப் பையில் 38 கிலோகிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெர்மனியரான அவரை சூரிச் கன்டோனல் பொலிசார் கைது செய்தனர்.
சட்டமா அதிபர் அலுவலகம் இப்போது விசாரணை நடத்தி வருகிறது.
மூலம்- 20min.