Biel இல் கொலை செய்யப்பட்ட பெண் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை இரவு சுமார் 9:45 மணியளவில், Biel இல் உள்ள Güterstrasse வசிக்கும் ஒருவரை பல நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பெர்ன் கன்டோனல் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில் அந்தப் பெண் ஒரு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்டவர் பெர்ன் கன்டோனைச் சேர்ந்த 32 வயது சுவிஸ் பெண் என்று கன்டோனல் பொலிசார் நேற்று அறிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் மற்றும் குற்றத்திற்கான பின்னணி உள்ளிட்டவை குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூலம்- 20min.