பனிமலைச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த 27 வயதுடைய சுவிஸ் இளைஞன், பனிச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
Valais இல் உள்ள Fionnay அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
2300 மீற்றர் உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவை அடுத்து, இவரும் மற்றொரு பனிமலை ஏற்ற வீரரும், சல நூறு மீற்றர்களுக்கு கீழே அடித்துச் செல்லப்பட்டனர்.
எனினும், அவசர சேவைகள் வருவதற்கு முன்பே பாதிக்கப்பட்டவருடன் சென்ற கூட்டாளி அவரைக் கண்டுபிடித்தார்.
பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் சியோனில் உள்ள மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.