பாஸல்-கன்ட்ரி மற்றும் சோலோதர்ன் கன்டோன்களில் வசிக்கும் சுவிஸ் குடிமக்கள் பெப்ரவரி 9 ஆம் திகதி குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்த வேண்டுமா என்பது குறித்து வாக்களிக்கவுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் தேசிய அளவில் குறைந்தபட்ச சம்பளம் இல்லை.
2014 இல் ஒரு மணி நேரத்திற்கு 22 பிராங்க் ஊதியத்தை அறிமுகப்படுத்தக் கோரி நடத்தப்பட்ட வாக்கெடுப்பு, 76 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை செயல்படுத்துவது சுவிட்சர்லாந்தின் வளமான பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இது உற்பத்தி செலவுகளை அதிகரிக்கும் மற்றும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த முடியாத சிறிய நிறுவனங்களை வணிகத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் வேலைகளை ஆபத்தில் ஆழ்த்தும் என அரசாங்கம் எச்சரித்திருந்தது.
தேசிய அளவில் குறைந்தபட்ச சம்பளம் தோல்வியடைந்த நிலையில், கன்டோன்கள், மற்றும் நகராட்சிகள் தங்கள் சொந்த விதிகளை அறிமுகப்படுத்துவதையோ அல்லது முயற்சிப்பதையோ தடுக்கவில்லை.
இதுவரை, ஜெனீவா, பாசல்-சிட்டி, நியூசாடெல், டிசினோ மற்றும் ஜூரா ஆகிய ஐந்து கன்டோன்களில் மட்டுமே இதுபோன்ற சட்டம் உள்ளது.
இங்கு குறைந்தபட்ச ஊதியம் 2025 ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்திற்கு 24.48 முதல் 21.40 பிராங்குகள் வரை உள்ளது.
சூரிச் போன்ற நகர அதிகாரிகளும் குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்த முயற்சித்த போதும், வெற்றிபெறவில்லை.
மூலம்- thelocal.ch