உயர்தர வாழ்க்கை கொண்ட நகரமாக நற்பெயர் இருந்த போதிலும், சுவிசின் சூரிச் நகரம் ஐரோப்பாவின் ஆரோக்கியமற்ற நகரங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
31 ஐரோப்பிய நகரங்களில் உள்ள சுகாதார நிலைமைகளை ஆய்வு செய்யப்பட்டதில், இது தெரியவந்துள்ளது.
சூரிச் மிகவும் விலையுயர்ந்த நகரமாகும். மாதத்திற்கு சராசரியாக 73 பிராங்குகள் என்ற அளவில், விளையாட்டு வசதிகளுக்கு தேவைப்படுகிறது.
சராசரியாக, சுவிஸ் மக்கள் 59.1 ஆண்டுகள் மட்டுமே நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர், இது ஐரோப்பிய சராசரியை விட மிகவும் குறைவு.
சூரிச் குடியிருப்பாளர்களில் 29 சதவீதம் பேர் மட்டுமே கால்நடையாகவோ அல்லது மிதிவண்டியிலோ தீவிரமாக பயணம் செய்கிறார்கள். ஆம்ஸ்டர்டாம் போன்ற நகரங்களில் இது 62 சதவீதமாகும்.
எனினும் வாழ்க்கைத் தர தரவரிசையில் 196 புள்ளிகளுடன், சூரிச் வாழ ஒரு கவர்ச்சிகரமான இடமாகத் தொடர்கிறது.