St. Gallen கன்டோனில் உள்ள Wil இல் உள்ள ஒரு உணவகத்தில் நேற்றுக்காலை 7.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு படையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர்.
தீயணைப்புத் துறையினர் ஒரு அறையில் 57 வயதுடைய ஒரு நபரை மயக்கமடைந்த நிலையில் கண்டனர்.
மீட்கப்பட்ட பிறகு அவர் சுயநினைவு பெற்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புகையினால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- 20min.