கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளின் பொருட்களிற்கு 25 வீதம் வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வந்தார்.
இந்த நிலையில் அவர், நேற்று முதல் கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு 25 வீதம் வரியை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதியாகும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றுக்கு 10 வீதம் வரி விதிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதனால் அமெரிக்கானடா இடையில் வர்த்தகப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கனடாவும், பதில் நடவடிக்கையை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.