இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.
இன்று காலை 8 மணியளவில் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் சமயக் கிரியைகளை அடுத்து, அஞ்சலி உரைகள் நடைபெறும்.
இதையடுத்து மாவிட்டபுரம் தச்சன்காடு மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும்.
மறைந்த மாவை சேனாதிராஜாவின் உடலை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அவரது குடும்பத்தினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் முக்கியமான பல தலைவர்களின் செயற்பாடே, மாவை சேனாதிராஜாவின் மரணத்திற்கு காரணம் என குடும்பத்தினர் கருதுவதால், அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வருவதை தவிர்க்க கட்சித் தலைமையத்திற்கு உடலை எடுத்துச் சென்று அஞ்சலிக்கு வைக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.