புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், குடிவரவுக்கான அரச செயலகம் (SEM) நெருக்கடியில் சிக்கியுள்ளது.
ஏற்கனவே 12 ஆயிரம் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், புதிய விண்ணப்பங்கள், கிடைத்து வருவதால், நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புகலிட வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லாதவர்களும் கூட நீண்ட காலம் தமது முடிவிற்கான காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் நிதிச் செலவு அதிகம் ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க பெடரல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மூலம்- 20min