சுவிஸ் போஸ்ட் கடிதங்களைத் தரம் பிரிக்கும் இரண்டு மையங்களை மூடவுள்ளது.
இதனால்,140 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடிதங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதால், சுவிஸ் போஸ்ட் இந்த முடிவை எடுப்பதாக நியாயப்படுத்துகிறது.
க்ரியன்ஸ் (LU) மற்றும் கோசாவ் (SG) இல் உள்ள கடிதங்களைத் தரம் பிரிக்கும் மையங்களை வேறு இடங்களுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதா, சுவிஸ் போஸ்ட் அறிவித்துள்ளது.
குறிப்பாக, 70 வேலைகள் க்ரியன்ஸிலிருந்து ஹார்கிங்கன் (SO)க்கும், கோசாவ்விலிருந்து சூரிச்-முல்லிகனுக்கும் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.
பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு தனிப்பட்ட தீர்வுகளை ஆராய வாய்ப்பு வழங்கப்படும்.
சுவிஸ் போஸ்ட்டின் கூற்றுப்படி, அனைத்து ஊழியர்களுக்கும் மாற்றுப் பதவி வழங்கப்படும்.
பிப்ரவரி 27 ஆம் திகதி இதற்கான ஆலோசனை செயல்முறை தொடங்கும்.
மூலம்- bluewin

