சூரிச் மாவட்ட கவுன்சில் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரான Daniel Kauf எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றுள்ளார்.
ஐந்து பேர் கொண்ட கவுன்சிலின் உறுப்பினராக தெரிவாவியுள்ள இவருக்கு 30,952 வாக்குகள் கிடைத்தன.
முன்னாள் SVP உறுப்பினர் Jedidjah Bollag 25,524 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.
கட்சிகளின் நித்திய கூட்டணியை விமர்சித்து, இவர் வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த தேர்தல் முடிவுகளால் பழமைவாதிகளான SVP மற்றும் FDP கட்சிகள் ஏமாற்றமடைந்துள்ளன.
அதேவேளை கவுன்சிலின் ஏனைய தற்போதைய உறுப்பினர்களான Patrice Zumsteg (41,091 வாக்குகள்), Matyas Sagi-Kiss (40,596 வாக்குகள்) and Marita Hauenstein (44,652 வாக்குகள்) பெற்று தெரிவாகியுள்ளனர்.
மூலம்- 20min.

