Basel மிருகக்காட்சிசாலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த ஒருவர், காண்டாமிருகத்தைத் தாக்க முயன்றுள்ளார்.
அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
அந்த நபர், காண்டாமிருகத்தை தாக்கிய போதும், அவருக்கோ, விலங்குக்கோ காயம் ஏற்படவில்லை என்று மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் கூறினார்.
Basel கன்டோனல் காவல்துறை வெள்ளிக்கிழமை இதனை உறுதிப்படுத்தியது.
கடினமான வாழ்க்கை சூழ்நிலையில் இருந்த- மனஉளைச்சலினால் பாதிக்கப்பட்டவரே அவர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
தனியுரிமை காரணங்களுக்காக அவர் மேலும் தகவல்களை வெளிப்படுத்த விரும்பவில்லை.
1990 ஆம் ஆண்டில், காண்டாமிருகக் கூண்டுக்குள் சென்ற 29 வயது பெண் ஒருவர் தாய் காண்டாமிருகம் தாக்கியதில் உயிரிழந்தார்.
மூலம் – swissinfo

