Winterthur இல் நேற்று முன்தினம் மாலை பாதசாரிக் கடவையில் சென்று கொண்டிருந்த 16 வயதுச் சிறுவன் கார் மோதி படுகாயம் அடைந்துள்ளார்.
Hohlandweg பேருந்து நிலையம் அருகே இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இந்த் விபத்தில் இளம் பெண் ஒருவரும் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய 22 வயது சாரதியிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மூலம்-20min