கடந்த ஆண்டு சுவிஸ் பெடரல் ரயில்வேயில் பயணம் செய்த மக்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாதளவுக்கு அதிகமாக இருந்தது.
கடந்த ஆண்டு, நீண்டதூர மற்றும் பிராந்திய ரயில்களில் தினமும் 1.39 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில், சுவிஸ் ரயில்வே இதனை அறிவித்துள்ளது.
அத்துடன், சுவிஸ் ரயில்வே ஆண்டு இலாபம் 275 மில்லியன் பிராங்குகளாக சிறிதளவு அதிகரித்திருப்பது குறித்தும், திருப்தியை வெளியிட்டுள்ளது.
சொத்து மற்றும் உள்கட்டமைப்பு பிரிவுகளும் இலாபத்தை ஈட்டிய அதே நேரத்தில், கார்கோ சுவிட்சர்லாந்து 76 மில்லியன் பிராங் இழப்பை சந்தித்துள்ளது.
மூலம்- swissinfo