திருத்தந்தையின் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லை என்று என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்த திருத்தந்தை பிரான்சிஸ் மோசமான நிலையிலிருந்து மீண்டு விட்டார்.
ஆனால் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என நேற்று மாலையில் வத்திக்கான் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “பரிசுத்த தந்தையின் மருத்துவ நிலை சீராக உள்ளது. கடந்த சில நாட்களாக பதிவு செய்யப்பட்ட முன்னேற்றங்கள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன.
இது இரத்த பரிசோதனைகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் மருந்து சிகிச்சைக்கு நன்கு பதிலளித்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- Bluewin