Baar இல், போக்குவரத்து சோதனையின் போது 30 கிலோ Kath போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட போது, இரண்டு சூட்கேஸ்களில் போதைப்பொருட்களை Zug பொலிசார் கண்டுபிடித்தனர்.
காரில் இருந்த 34 வயதுடைய சோமாலிய மற்றும் 41 வயதுடைய டச்சுக்காரர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் போதைப்பொருள் சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மூலம்- 20min.