Uttigen இல் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த துருப்புக்காவி கவசவாகனம் Aare ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இராணுவத்தின் கவசப் பயிற்சி முகாமில் சாரதி பயிற்சி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஆற்றில் மூழ்கிய காலாட்படை சண்டை வாகனத்தில் இருந்த மூன்று படையினர் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்- bluewin