Solothurn கன்டோனில் Biberist இல் உள்ள Lidl கடையின் முன்பக்க கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கார் ஒன்று உள்ளே புகுந்துள்ளது.
நேற்று மாலை 6.25 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்ற விபரங்கள் தெரியவரவில்லை.
இந்த விபத்தில் யாரேனும் காயமடைந்தனரா என்று பொலிசார் தகவல் வெளியிடவில்லை.
இந்தச் சம்பவத்தை அடுத்து Lidl கடை மூடப்பட்டுள்ளது.
மூலம்- Bluewin